sent_token
stringlengths 1
79k
|
|---|
லாரன்ஸ் கீலீஹ் ழிஷீஸ்மீறீ விணீமீக்ஷீ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு ஆதங்கத்தை முன்வைக்க விரும்புகிறேன் பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள்.
|
தத்துவமும் புனைகதையும் பிரிந்தது இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது.
|
இரண்டும் ஒன்றாகத்தான் புராணக் கதைக் காலங்களிலிருந்து உருவாகி வந்திருக்கின்றன.
|
அரிஸ்டாடில் தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிற தம்பதிகளைப் போல் தனித்தனியே பிரிந்து போயின.
|
இதன் காரணமாக நாவல் மேலோட்டமானதாகவும் தத்துவம் அருவமானதாகவும் வறண்டு போயின.
|
நாவலில் இவ்விரண்டும் மீண்டும் இணைந்து வர வேண்டும்.
|
இத்தகையதோர் இணைப்பில் புனைவாகியிருக்கும் நாவல்தான் இடைவெளி.
|
இதனாலேயே தமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவலாக இடைவெளி தனித்துவம் பெற்றிருக்கிறது.
|
சம்பத்துக்கு முன் தமிழ் நாவல் பரப்பில் கருத்துலகச் சாயல் கொண்ட படைப்பாளியாக அறியப்பட்டு அதனாலேயே பிரபல்யமும் அடைந்தவர் ஜெயகாந்தன்.
|
ஆனால் அவருடைய படைப்புகளில் புனைவுலகின் மெய்யறிவிலிருந்து கருத்துகளோ சிந்தனைகளோ உருண்டு திரள்வதில்லை.
|
மாறாக கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை ஸ்வீகரித்துக் கொண்டு அவற்றுக்குப் புனைவடிவம் தந்தவர் ஜெயகாந்தன்.
|
இவ்விடத்தில் இன்று கலை இலக்கியமானவை எந்த ஓர் அமைப்புக்குமோ கொள்கைக்குமோ துறைசார் அறிவுக்குமோ சேவகம் செய்வன அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
|
மாறாக படைப்பின் மெய்யறிவுப் பயணத்திலிருந்து உருக்கொள்ளும் சிந்தனைகளிலிருந்து பிற அமைப்புகளும் கொள்கைகளும் துறைசார் அறிவுகளும் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள முடியும்.
|
முடிந்திருக்கிறது.
|
சலித்துப் போன உதாரணம் ஃப்ராய்டு தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து பெற்ற பெறுமதிகள்.
|
கலைஇலக்கியங்களிடம் காலம் எதிர்பார்ப்பது இதுதான்.
|
ஜெயகாந்தனிடம் இது நிகழவில்லை.
|
ஆனால் இடைவெளி நாவலில் அடிப்படைகளில் உழன்று தகிக்கும் தினகரனை சாவு பிரச்சனை ஆட்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட பயணத்தினூடாக படைப்பு ஒரு மகத்தான கண்டுபிடிப்பை வசப்படுத்துகிறது.
|
அதுவே இப்படைப்பை முக்கியத்துவமிக்கதாக்கி இருக்கிறது.
|
சம்பத்தின் இடைவெளிக்குப் பின் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.
|
சில குறிப்புகள் தமிழில் சிந்தனைத் தளத்தில் இயங்கிய முதல் நாவலாகப் போற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது.
|
பெறப்பட்ட அறிவின் உதிரித் தொகுப்புகளாகவே பெரிதும் அமைந்துவிட்ட இந்நாவல் அதன் வசீகர நடை காரணமாக பெரிதும் சிலாகிக்கப்பட்டது.
|
அடியறியா ஆழமறியா புனைவுப் பயணத்தினூடாகப் படைப்பு மெய்யறிவு கொள்வதற்கான எவ்விதப் பிரயாசையும் இந்நாவலில் மேற்கொள்ளப்படவில்லை.
|
ஆனால் ஒரு அடிப்படைப் பிரச்சனைக்குத் தன்னை முழு முற்றாக ஒப்புக் கொடுக்க சம்பத்துக்கு முடிந்திருக்கிறது.
|
இடைவெளி 7 அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல்.
|
இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது என்ன என்று பார்க்கலாம்.
|
பத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சனைகளில் உழன்று தகிக்கும் ஒருவர் தினகரன்.
|
இப்போது அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி.
|
பிறப்பால் பிராமணன்.
|
அவருக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும்.
|
காரணம் அவர் ஏசு கிறிஸ்துவை ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கடைசி பட்சமாக அசைக்க முடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணிப் போயிருக்கிறார்.
|
இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம்.
|
ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும்.
|
ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு.
|
இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம்.
|
கிட்டத்தட்ட 35 வயதான தினகரனின் குடும்பம் இது.
|
மனைவி பத்மா.
|
குழந்தைகள் குமார் ஸ்ரீதர் ஜெயஸ்ரீ சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களே இவை.
|
கலவியில் அதீத நாட்டமுடையவர்.
|
சாவு பிரச்சனையில் உழலத் தொடங்கிய பிறகு மனைவியே கேட்டுக் கொண்டும் மறுக்குமளவு பிரச்சனையில் அமிழ்ந்து போனவர்.
|
டில்லியில் பணிபுரிந்த போது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு.
|
மனதில் நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு.
|
சாவு பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார்.
|
பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது வேலை அதிகமில்லாத மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக் கொள்கிறார்.
|
முன்னர் டில்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள் அவர் நீடித்திருந்ததில்லை.
|
சாவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உழன்று தவிக்கும் போது வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன.
|
இவ்வாறாக லௌகீக வெற்றியை நோக்கி விரையும் பொது ஓட்டத்துக்கு எதிர்திசையில் நிகழ்கிறது இவர் பயணம்.
|
மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது.
|
இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது.
|
சாவு பற்றிய ஒரு அடிப்படைத் தன்மையை சொல்லிவிடப் போகிறோம் என்ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது.
|
சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிப்படைக் கூறு ஒன்றுதான் என்ற யூகத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது.
|
இரண்டாவது அத்தியாயத்தில் தினகரன் தான் காணும் கனவில் இடைவெளி என்று தன்னையறியாது சொல்கிறார்.
|
எதிரில் அமர்ந்திருக்கும் சாவு உருவம் தலையாட்டுகிறது.
|
இது குறித்து சதா உலைந்து கொண்டிருக்கும் தினகரன் வாழ்வு என்பது அணுசரணையான இடைவெளி என்றும் சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி என்றும் கடைசியில் கண்டடைவது எண்ண ஓட்டங்களுக்கு பெரிய எண்ண ஓட்டங்களுக்கே உரித்தான வீர்யத்தோடும் பூ மணப்பின் குணத்தோடும் நாவலில் விகாசம் பெற்றிருக்கிறது.
|
தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும்.
|
கண்டடைவதின் பரவசத்தையும் தான்.
|
இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை.
|
அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மானசீகமாக மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.
|
தமிழ் நாட்டில் காலம் காலமாகப் புழங்கி வந்த நியதிகளில் ஒன்று வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்பது.
|
ஆண்களுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் எண்ணை ஸ்நானம் பெண்களுக்கு செவ்வாயும் வெள்ளியும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.
|
இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன் 1945 கால தேச வர்த்த மானங்களையட்டி இது வாரம் ஒரு தடவையாகச் சுருங்கி இருந்தது.
|
ஆனால் அந்த அளவுக்காவது கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது.
|
பெரியவர்கள் அலுவல் சௌகரியங்களை ஒட்டி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள்.
|
அதாவது அரசாங்க அதிகாரிகள் வக்கீல்கள் முதலியோர் பலரும் சனிக்கிழமைக்கு பதில் விடுமுறை தினமான ஞாயிறு அன்று வைத்துக் கொண்டார்கள்.
|
ஆனால் அவர்களின் பையன்களுக்கு சனிக்கிழமையும் பெண்களுக்கு வெள்ளியன்றும் எண்ணைக்குளி கட்டாயமாக உண்டு.
|
அப்போதெல்லாம் பெண்பாலர் வெளி வேலைக்குப் போவது அரிது என்பதை நினைவில் கொள்ளலாம்.
|
வயது வந்த பெண்கள் பலரும் பள்ளிக் கூடத்துக்கே போகவில்லை.
|
என் மாதிரி சின்னப்பையன்களுக்கு அம்மாக்களே எண்ணை தேய்த்து விடுவது வழக்கம்.
|
கிழக்கே பார்த்து உட்கார வைத்து மிளகு போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை இளஞ்சூடாக என் தலை மீது வைத்து என் தாயார் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அழுத்தித் தேய்ப்பார்.
|
சில சமயம் நல்லெண்ணைக்குப் பதில் பாட்டில்களில் கிடைக்கும் சந்தனாதித் தைலம் அரைக்கீரை விதைத் தைலம்.
|
கும்பகோணம் டி.
|
எஸ்.
|
ஆர் கம்பெனியின் சரக்குகள் பிரபலம் இவை இருக்கும்.
|
சிலர் தங்கள் வீட்டிலேயே கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களைக் காய்ச்சி உபயோகிப்பார்கள் சென்னையிலிருந்து வரும் பண்டிட் கோபாலாசார்லுவின் பிருங்காமலகத் தைலம் புகழ்பெற்றது.
|
ஆனால் விலை அதிகம்.
|
மூளைக்குக் குளிர்ச்சி என்று சொல்லுவார்கள்.
|
மூளையையே மூலதனமாகக் கொண்டு வக்கீல் தொழில் செய்து வந்த என் தந்தை இதையே வாங்கி உபயோகித்தார்.
|
அதில் போட்டிருக்கும் வைத்தியரின் படம் கற்பனையில் பதியக்கூடிய ஒரு போட்டோ கோட்டு டர்பன் அணிந்து நீள தாடி மீசையுடன் நீண்ட நாமமும் தரித்திருப்பார்.
|
தலைக்கு எண்ணை தேய்ப்பது முதல் கட்டம்.
|
இதுவரை எனக்கு அழுகை ஆட்சேபம் ஒன்றும் கிடையாது.
|
ஆனால் அடுத்த கட்டமாக பழனி முருகன் போல் கோவனாண்டியாக நின்று உடம்பு முழுவதும் எண்ணை பூசிக்கொள்ள வேண்டும்.
|
இது காய்ச்சப்படாத நல்லெண்ணையாக இருக்கும் இது எனக்குப் பிடிக்காத ஐட்டம்.
|
முக்கியமாக முகத்தில் எண்ணை தடவிக் கொள்வதில் எனக்கு பயங்கர விரோதம்.
|
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாதிரி விஷயங்களில் என் அனுமதி கோரப்படவில்லை.
|
அம்மா வைத்ததுதான் சட்டமாக இருந்தது.
|
வீட்டுக்கு வீடு இதே வாசற்படிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
|
எண்ணை தேய்த்துக் கொண்டு பதினைந்து இருபது நிமிடங்கள் ஊற வேண்டும்.
|
அப்போது வெயிலில் போகக் கூடாது ஒன்றும் தின்னக் கூடாது என்று இரண்டு விதிமுறைகள்.
|
அப்போது மட்டும் அல்ல குளித்த பிறகுகூட அன்று வெளியில் போகக்கூடாது.
|
போனால் தலைவலி வரும்.
|
ஆக சனிக்கிழமை விடுமுறை நாளானாலும் பொழுது சாயும் வரை வீட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது.
|
வீட்டுத் தோட்டத்தில் சுற்றினால்கூட வசவு விழும்.
|
பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களானாலும் சரி வெண்ணீரில் குளிப்பவர்களாக இருந்தாலும் சரி எண்ணை ஸ்நானம் என்றால் வெண்ணீரில்தான் குளிக்க வேண்டும்.
|
எண்ணை குளிர்ச்சி என்பதால் ஈடுகட்டுவதற்காக அன்று வெந்நீர் கொஞ்சம் கூடவே வெம்மையாக வைக்கப்படும்.
|
தலையிலிருந்து எண்ணையை எடுக்க அந்த நாளில் ஷாம்பூ போன்ற ஜோர் எல்லாம் வரவில்லை.
|
சோப்புக்குக் கூட அன்று லீவுதான் தொன்று தொட்டு வழங்கி வந்த சீயக்காய்தெலுங்குச் சீமையில் அதாவது சுந்தரத் தெலுங்கு பேசின சென்னை மாகாணத்தின் ஆந்திர ஜில்லாக்களில் குங்குடிக்காயை அரைத்து நமது சீயக்காய் மாதிரி உபயோகித்தனர்.
|
நம்ம ஊரில் சீயக்காய்க்கு சிலசமயம் ஷிஷீணீஜீ ழி என்று ஆங்கிலத்தில் எழுதினர்.
|
ஆனால் குங்குடிக்காய் தான் நிஜமான சோப் நட்.
|
சோப்பு போலவே அதில் நிறைய நுரைவரும்.
|
நமது சீயக்காய் எண்ணையை எடுக்குமே தவிர நுரை ஒன்றும் பெரிதாக வராது.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.