sent_token
stringlengths
1
79k
மேலும் சிவாஜி பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவிலும் கல்விக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு பெரிய இனிப்பு சோளம் வளர்ப்பு திட்டத்தின் அமைப்பை மேற்பார்வையிட்டார்.
சமீபத்தில் இந்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சகத்தால் பாராமதி தேசிய அபியோடிக் அழுத்த மேலாண்மைத் திட்டத்தில் ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.
கல்வி 1974 இல் புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம்.
1977 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் முதுகலைப் பட்டம்.
1981 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார்.
1997 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மிகவும் புகழ்பெற்ற 47 முன்னாள் மாணவர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.
சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புமகாராட்டிர அறிவியலாளர்கள் பகுப்புமகாராட்டிரப் பெண் அறிவியலாளர்கள் பகுப்புஅமெரிக்க இந்துக்கள் பகுப்புவாழும் நபர்கள்
கிரண் வாலியா என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் தில்லியின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.
இவர் தில்லியின் மாளவியா நகர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
இளமையும் கல்வியும் கிரண் வாலி புது தில்லியில் பிறந்தார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
அரசியல் வாழ்க்கை கிரண் வாலியா மூன்று முறை தில்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
இவரது சமீபத்திய ஆட்சிக் காலத்தில் இவர் மாளவியா நகர் தில்லி சட்டமன்றத் தொகுதி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
சீலா தீட்சித்தின் அரசில் மாநில அமைச்சராகவும் இருந்தார்.
வகித்தப் பதவிகள் மேலும் பார்க்கவும் தில்லி சட்டமன்றம் இந்திய அரசு இந்தியாவின் அரசியல் இந்திய தேசிய காங்கிரஸ் மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1968 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் 19 மார்ச் 19437 அக்டோபர் 2020 மரியோ மோலினா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மெக்சிகோவை சேர்ந்த வேதியியலாளர் ஆவார்.
அண்டார்டிக் ஓசோன் துளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் குளோரோபுளோரோகார்பன் வாயுக்களால் பூமியின் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கண்டறிந்ததற்காக 1995 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.
மெக்சிகோவில் பிறந்து வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் விஞ்ஞானி எனவும் மெக்சிகோவில் பிறந்து நோபல் விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவரது வாழ்க்கையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இர்வின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சான் டியாகோ போன்றவற்றில் வளிமண்டல அறிவியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பதவிகளை வகித்தார்.
மெக்சிகோ நகரத்தில் உள்ள ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியோ மோலினா மையத்தின் இயக்குநராகவும் இருந்தார்.
மோலினா மெக்சிகோவின் அதிபர் என்ரிக் பெனா நீட்டோவின் காலநிலை கொள்கை ஆலோசகராக இருந்தார்.
7 அக்டோபர் 2020 அன்று மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் மோலினா மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்தது.
மோலினா 7 அக்டோபர் 2020 அன்று மாரடைப்பு காரணமாக 77 வயதில் இறந்தார்.
சான்றுகள் வெளி இணைப்புகள் 8 1995 " " .
பகுப்புநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள் பகுப்பு2020 இறப்புகள் பகுப்பு1943 பிறப்புகள்
மான் வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.
இந்து சமய புராணங்களிபடி மான் என்பது முருகன் திருமகள் மற்றும் சந்திரனின் வாகனம் ஆகும்.
வாகன தத்துவம் கலைமான் கொற்றவையான துர்க்கைக்கு வாகனமாக இருக்கிறது.
பாய்ந்து வரும் கலைமானைக் கொற்றவை வாகனமாகக் கொண்டிருப்பதால் அவள் பாய்கலைப் பாவை என்றும் கலையதூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.
மானை சிவபெருமான் இடது கரத்தில் ஏந்தியுள்ளார்.
அதனால் அவருக்கு மானேந்தி அப்பர் என்பது பெயராயிற்று.
கோயில்களில் உலா நாட்கள் மருங்கூர்இரவிபுதூர் ஆபத்துகாத்த நங்கை அம்மன்.
காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் போது மான் வாகனத்தில் முருகன் உலா வருகிறார்.
...?19374 வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு உற்சவத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள் மனோரஞ்சித பூ மல்லிப்பூ மாலை அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தங்க மான் வாகனத்தில் உலா வருகிறார்.
பாவனா கவுர் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தில்லி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் தில்லியின் ஏழாவது சட்டமன்றத்தில் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி பாவ்னா கவுர் தனது கல்வியைத் தில்லியிலும் ரோத்தக்கிலும் முடித்தார்.
இவர் இளங்கலை மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
அரசியல் வாழ்க்கை 1997ஆம் ஆண்டு மது விகார் பகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பகுதி உறுப்பினராக இருந்தார்.
பாவனா கவுர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்.
இவர் 2013 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 26.79 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.
2015 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் பாஜகவின் தரம் தேவ் சோலங்கியை 30849 வாக்குகள் 20.90 வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தில்லியின் ஆறாவது சட்டப் பேரவையில் இவர் சட்டமன்ற உறுப்பினரானார்.
2020 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் 20152020 20152020க்கு இடையில் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6வது டெல்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் 2020 தற்போது 2020 முதல் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7வது தில்லி சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.
தில்லி சட்டப் பேரவையின் குழு ஒதுக்கீடுகள் உறுப்பினர் 20222023 பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் 20222023 அரசாங்க முயற்சிகளுக்கான குழு தேர்தல் செயல்திறன் மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1970 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள்
கமலிகா குகா தாகுர்தா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.
இவர் முஜே சாந்த் சாஹியே மூலம் அறிமுகமானார்.
கியுங்கி சாஸ் பி கபி பஹு தி மூலம் வெற்றி கண்டார்.
விஷ்ணு புராணத்தில் தொலைக்காட்சித் தொடர் சுமித்ராவாகவும் நடித்தார்.
நாகினியில் இவர் கோயிலில் வசிக்கும் மா காளியை வழிபடும் மற்றும் நாகினை மகாநாக்ராணி சிவாங்கியின் சிவன்யா தாய் அகற்றுவதற்கான திட்டங்களை உருவாக்கும் குரு மாவின் பாத்திரத்தில் நடிக்கிறார்.
தாகுர்தா 2014ல் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.
ஈவ் என்சுலர் எழுதிய தொடரான எமோஷனல் கிரியேச்சரில் ஒரு பகுதியாக இருந்தார்.
தொலைக்காட்சி தொடர்கள் திவ்யாவாக முஜே சாந்த் சாஹியே பா பாஹு அவுர் பேபியில் அனிசின் அம்மாவாக கசுதி கியுங்கி சாஸ் பி கபி பஹு தியில் காயத்ரி ஜம்னாதாசு விராணி விஷ்ணு புராணத்தில் தொலைக்காட்சித் தொடர் சுமித்ராவாக க்யா ஹட்சா க்யா ஹகீகத்தில் கரம் அப்னா அப்னாவில் தேவிகாவாக கஸ்தூரியில் காயத்ரி தேவ் பாலிகா வடுவில் பிரமிளாவாக யஹான் மெயின் கர் கர் கேலியில் தேஜஸ்வினியாக ஜில்மில் சிதாரோன் கா ஆங்கன் ஹோகாவில் ஜிந்தகியில் வந்திதா சிறீனிவாசு ஏக் ஹசினா தியில் தொலைக்காட்சித் தொடர் பாயல் மற்றும் நித்யாவின் அம்மாவாக மஹாரக்ஷக்கில் தேவி மீனாவாக லபோனியின் தமயந்தியின் தாயாக ஜோதா அக்பர் நாகினில் குரு மா மகாமாயா "சூனியக்காரி"யாக சசுரல் சிமர் காவில் யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹையில் குருமாவாக காமினியாக சந்தோஷி மா துர்காவில் ஜோக்மாயாவாக மாதா கி சாயா அதாலத்தில் அத்தியாயம் 144 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புமேற்கு வங்காள நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்
வட இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட கீதா சிங் இளம்வயதிலேயே தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் குடியேறியுள்ளார்.
திரைப்படத்துறை மீதான ஆர்வத்தினால் தெலுங்கு மொழியை திறம்பட கற்று மறைந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இ.
வெ சத்யநாராயணனால் தயாரிக்கப்பட்ட எவாடி கோல வாடிடி 2005 என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமாயுள்ளார்.
முதல் படத்திலேயே தனது நகைச்சுவை நடிப்பினால் பரவலாக அறியப்பட்ட இவர் அதை தொடர்ந்து அல்லரி நரேஷ் நடித்த கிடகிதலு 2006 திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானார்.
இவ்விரு படங்களையும் சத்யநாராயணா இயக்கி தயாரித்துள்ளார்.
கீதா சிங் பதினெட்டு ஆண்டுகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கலைஞராக ஐம்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
பிரம்மானந்தம் அலி வேணு மாதவ் தர்மவரப்பு சுப்பிரமணியம் மற்றும் கொண்டவலச லட்சுமண ராவ் போன்ற பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இவருக்கான வெளியையும் உருவாக்கியுள்ளார்.
இவர் தனது அண்ணனின் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
அவர்களில் ஒரு மகன் சாலை விபத்தில் இறந்த பின்னர் திரை வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்.
திரைப்படவியல் ஏவாடி கோலா வாடி 2005 கிடாக்கிதாலு 2006 பிரேமாபிஷேகம் 2008 சசிரேகா பரிணயம் 2009 ஊஹா சித்திரம் 2009 மொண்டி மொகல்லு பென்கி பெல்லாலு 2009 மொகுடு காவல் 2009 இலக்கு 2009 மல்லி மல்லி 2009 ராம்பாபு காடி பெல்லம் 2010 ஆகாச ராமண்ணா 2010 ராம்தேவ் 2010 விஷம் 2011 பப்லு 2011 நாக்கு ஓ லவ்ரூந்தி 2011 பில்லா டோரிகிதே பெல்லி 2011 அமயக்குடு 2011 தெலுகம்மயி 2011 சீமா தபகை 2011 சிவப்பு 2012 தூல் 2012 லக்கி 2012 நீலவேணி 2013 ஒன்பதுலே குரு 2013 தமிழ் ராயலசீமா எக்ஸ்பிரஸ் 2013 கெவ்வு கெக்கா 2013 பொட்டுக்காடு 2013 சங்கராபரணம் 2015 சரினோடு 2016 கல்யாண வைபோகம் 2016 ஈடோ ரகம் ஆதோ ரகம் 2016 தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.
பிஎல் 2019 மேற்கோள்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதெலுங்கு நகைச்சுவையாளர்கள் பகுப்புதெலுங்கு நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள்
இரவதி அர்சே என்பவர் இந்திய நடிகையும் மற்றும் பின்னணி ஒலிக் கலைஞரும் ஆவார்.
அர்சே பல தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியுள்ளார்.
இவர் பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார்.
திரைப்படவியல் ஸ்பிலிட் வைட் ஓபன் 1999 ஹே ராம் ஹிந்தி 2000 ஷரரத் இந்தி 2002 குச் மீத்தா ஹோ ஜே இந்தி 2005 மித்யா 2008 ராத் கயி பாத் கயி?
இந்தி 2009 நாங்கள் குடும்பம் இந்தி 2010 மிட்டல் மிட்டல் இந்தி 2010 மைக்கேல் 2011 கச்சா லிம்பூ இந்தி 2011 ஹேட் ஸ்டோரி ஹிந்தி 2012 அஸ்து மராத்தி திரைப்படம் 2015 கசவ் 2017 மராத்தி திரைப்படம் சிம்பா இந்தி 2018 ஆப்லா மனுஸ் மராத்தி திரைப்படம் 2018 டேக் கேர் குட் நைட் பாய் வ்யக்தி கி வள்ளி மராத்தி திரைப்படம் 2019 தட்கா திரைப்படம் இந்தி 2022 ஷம்ஷேரா இந்தி 2022 தொலைக்காட்சி டில் மில் கயே அச்சனக் 37 சால் பாத் டிவி தொடர் 2002 சாந்தி கபி கபி 1997 மிருத்யுதந்த் அங்கஹீ வாரிஸ் தன்ஹா சஞ்சீவனி சுரபி சோட்டா முஹ் அல்லது பாடி பாத் 1999 பின்னணி ஒலி தில் தோ பாகல் ஹையின் பிரெஞ்சு பதிப்பு மாதுரி தீட்சித்தின் குரல்.
கோல்டன் காம்பஸின் இந்தி பதிப்பு நிக்கோல் கிட்மேனின் குரல் .
விருதுகள் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகையான காசவ் ஜீ சித்ரா கௌரவ் விருதினை வென்றார் முதலாவது இந்திய தொலைக்காட்சி விருதுகளில் அன்காஹீக்காக சிறந்த நடிகையாக முன்னணி பாத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டார்.
பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்திய தொலைக்காட்சி நடிகைகள்
ப்ரோனீதா சுவர்கியாரி இந்தியாவின் அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் இணையதள காணொளி கலைஞருமாவார்.
குடும்பமாக அஸ்ஸாமில் இருந்து குடிபெயர்ந்து தில்லியில் வசித்து வரும் இவர் ஜீ தொலைக்காட்சியில் வெளியான யதார்த்த நடன நிகழ்ச்சியான டான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் ஐந்தின் வெற்றியாளர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை ப்ரோனீதா சுவர்கியாரி அசாமில் உள்ள பக்சா போடோலாந்து பிராந்தியப் பகுதியைச் சேர்ந்தவர்.
இவரது குழந்தை பருவத்திலிருந்தே நடனத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதற்காக நாட்டுப்புற பாரம்பரிய மற்றும் மேற்கத்திய என எல்லா நடன வடிவங்களிலும் தொழில்ரீதியாகப் பயிற்சிகளை முறையாக பெற்றுள்ளார்.
முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில் அவரது பதினைந்தாவது வயதிலேயே உள்ளூர் பிஹு விழாவில் நடனமாடி தொழில்முறை நடனத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு தொழில்முறை நடனப் பயிற்சிக்காக டெல்லியில் உள்ள டான்ஸ் ஒர்க்ஸ் அகாடமியில் சேர்ந்து கதக் நடனத்தின் அடிப்படைகளையும் சூட்சுமங்களையும் காற்றுள்ள இவர் குருகிராமில் உள்ள கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸில் நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
டான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் இரண்டில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்று வெளியேற்றப்பட்ட ப்ரோனீதா அதற்காக மனம்வருந்தாமல் மேலும் தனது நடனத்திறமையை மேம்படுத்தி நடனக் கலைஞரான புனித் ஜெயேஷ் பதக்கின் புனிட் கே பாந்தர்ஸ் புனித்தின் சிறுத்தைகள் என்ற நடனக்குழுவின் மூலமாக டான்ஸ் இந்தியா டான்ஸ் ஐந்தாவது பாகத்தில் முதலிடம் பிடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்.
நடனத்தின் மீது அவருக்கு இருந்த பற்றும் ஆர்வமுமே இந்த வெற்றியை பெற்றுத்தந்தாக கூறியுள்ள இவர் "ஹோடோ பே பாஸ் தேரா நாம் ஹை" என்ற திரைப்படம் மூலம் திரையுலகிலும் அறிமுகம் கிடைத்துள்ளது.
23 ஜூன் 1996 அன்று பிறந்துள்ள இவர் 2016 ஆம் ஆண்டில் பாஞ்சோ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை மாதுரி திட்சித்தை தனது முன்மாதிரியாக கொண்டுள்ள இவர் தன்னைப்போல ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நடனக்கலையை கற்றுக்கொடுப்பதிலும் நாட்டிய நிகழ்ச்சிகளை வடிவமைத்து சிறந்த நடன அமைப்பாளராகவும் இயக்குனராகவும் வேண்டுமெனெ கனவுகளைக் கொண்டுள்ளார்.
மேற்கோள்கள் பகுப்புகதக் நடனக் கலைஞர்கள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்
திவ்யா ராணா ஒரு முன்னாள் இந்தித் திரைப்படத்துறையின் நடிகையும் புகைப்படக்கலைஞரும் தொழிலதிபருமாவார்.
ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டுள்ளார்.
ராஜ் கபூரின் இளைய மகன் ராஜீவ் கபூர் அறிமுக நாயகனாக நடித்த ஏக் ஜான் ஹை ஹம் 1983 திரைப்படத்தில் திவ்யாவும் கதாநாயகியாக அறிமுகமாகி அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
ஆனால் இப்படம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ராஜீவ் கபூர் மற்றும் மந்தாகினி இணைந்து நடித்த ராஜ் கபூரின் ராம் தேரி கங்கா மைலி 1985 திரைப்படத்திலும் திவ்யா இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும் முதல் கதாநாயகியான மந்தாகினி பிரபலமடைந்த அளவு திவ்யா பிரபலமாகவில்லை.
ஆனாலும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் பதினோரு திரைப்படங்களில் திவ்யா நடித்துள்ளார்.
அவற்றில் வதன் கே ரக்வாலே ஏக் ஹி மக்ஸத் ஆஸ்மான் 1984 மா கசம் 1985 திரைப்படம் பரம் தரம் போன்றவை குறிப்பிடத்தக்கது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பசல் என்பவரைத் மணமுடித்துள்ள திவ்யா தனது திருமணத்திற்குப் பிறகு திரைப்படத்துறையை விட்டு முற்றிலுமாக விலகி சல்மா மானேகியா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் முற்றிலுமாக ஈடுபட்டுள்ளார்.
இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தற்போது புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து கொண்டே பீங்கான் சிற்பங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் மேற்கோள்கள் பகுப்புஇந்திய நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள்
கிலெம்சுங்லா இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமாவைச் சேர்ந்த கல்வியாளரும் பேராசிரியையுமாவார்.