sent_token
stringlengths 1
79k
|
|---|
ஆனால் எவ்வளவு நேரம் ஆனாலும் இரவு வீடு திரும்புமாறு சரோஜா அவரை வற்புறுத்துகிறார்.அன்றிரவு சரோஜா மலம் கழிப்பதற்காக பாறையின் அருகே உள்ள புதர்களுக்குச் செல்கிறாள் குமரேசன் இல்லாத நேரத்தில் மாராயி மற்ற கிராமவாசிகளுடன் சேர்ந்து அவளைக் கொல்ல சதி செய்வதைக் கேட்கிறாள்.
|
பிடிபடக் கூடாது என்று தீர்மானித்து புதர்ச் செடிகளுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள்.
|
அவள் எங்கிருக்கிறாள் என்பதை ஊர் மக்கள் உணர்ந்ததும் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் புதர்களைக் கொளுத்திவிடுகிறார்கள்.
|
சான்றுகள் பகுப்புதமிழ் இலக்கியம் பகுப்புஇந்திய இலக்கியம்
|
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐக்கிய ராச்சியத்தின் லண்டன் மாநகரில் பிறந்தவருமான புஷ்கலா கோபால் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலைஞரும் விரிவுரையாளரும் ஆசிரியரும் நடன இயக்குனரும் எழுத்தாளரும் நடன ஆலோசகரும் இசையமைப்பாளருமாவார்.
|
இவர் பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக 2020ம் ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகாராணியால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
|
புஷ்கலா கோபால் 1974 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் தனது இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெற்றவர்.
|
1977 ஆம் ஆண்டில் இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால் பரதநாட்டியத்தில் முதுகலை பட்டய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
|
1983 ஆம் ஆண்டில் புஷ்கலாவுக்கு பிரித்தானிய மன்றத்தின் நிதியுதவி வழங்கப்பட்டு நாடகம் நடனம் மற்றும் நாட்டியக் கல்வியின் மேற்கத்திய நுட்பங்களைப் படிப்பதற்காக ட்ரெண்ட் பார்க்கில் ஒரு வருட காலம் படித்துள்ளார்.
|
தேசிய உலக அளவில் பல நாட்டிய கல்வித் திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.
|
புஷ்கலா இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நாட்டிய வகுப்புகள் விரிவுரைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.
|
அங்கீகாரம் மற்றும் விருதுகள் "தெற்காசிய நடனத்திற்கான சேவைகளுக்காக" 2020 பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாள் கௌரவத்தில் பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
|
பரதநாட்டியத்தில் மேம்பட்ட பயிற்சிக்கான தேசிய உதவித்தொகை இந்திய கல்வி அமைச்சகம் 1975 சிங்கர் மணி சூர் சிங்கர் சம்சாத் பாம்பே 1977 ஆம் ஆண்டில் இருந்து பட்டம் பரதகலாஞ்சலி சென்னை 1979 ஆம் ஆண்டில் நாட்டிய பூர்ணா விருது பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் 1983 டைம் அவுட் டான்ஸ் விருது 1988 டிஜிட்டல் நடன விருது 1988 இசை ஆய்வுகளுக்கான குல்பென்கின் விருது 1992 2015 ஆம் ஆண்டு பரதநாட்டியத் துறையில் சிறந்த சேவைகளுக்கான கலை மன்றம் மற்றும் மிலாப் ஃபெஸ்ட் விருது தனிப்பட்ட வாழ்க்கை புஷ்கலா கோபால் இங்கிலாந்தில் உள்ள செல்ம்ஸ்போர்டில் ராணுவ அதிகாரியின் மகளாக பிறந்துள்ளார் இந்திய குடிமைப்பணி அதிகாரியான இவரது கணவருடன் இந்தியாவின் டெல்லியில் வசித்து வருகிறார்.
|
மேற்கோள்கள் பகுப்புஇந்தியப் பெண் நடனக் கலைஞர்கள் பகுப்புபரதநாட்டியக் கலைஞர்கள் பகுப்புவாழும் நபர்கள்
|
அன்னி திவ்யா பிறப்பு 1987 இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்த இந்திய விமானியாவார்.
|
ஆரம்ப கால வாழ்க்கை இந்தியாவின் ஆந்திரப்பிரேதேசத்தை சேர்ந்த அன்னியின் தந்தையார் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.
|
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் அருகே இவரது தெலுங்கு பேசும் குடும்பம் வசித்து வந்தது.
|
அந்த கால கட்டத்தில் தான் அன்னி பிறந்துள்ளார்.
|
அவரது தந்தை ஓய்வு பெற்ற பிறகு அவர்களது குடும்பம் ஆந்திராவின் விஜயவாடாவில் குடியேறியது பள்ளிக்கல்வியை அன்னி அங்கே படித்துள்ளார்.
|
விமானி வேலை 17 வயதில் பள்ளிப்படிப்பை முடித்த உடனேயே உத்தரபிரதேசத்தில் உள்ள விமானப்பயிற்சி பள்ளியான இந்திரா காந்தி ராஷ்டிரிய ஊரான் அகாடமியில் சேர்ந்துள்ளார்.
|
இரண்டே ஆண்டுகளில் அவரது பத்தொன்பதாவது தனது பயிற்சியை முடித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது விமானப்பணியை தொடங்கியுள்ளார்.
|
பயிற்சிக்காலத்தில் பல்வேறு வழித்தடங்களிலும் விமானங்களில் சென்றிருந்தாலும் இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு போயிங் 737 விமானத்தில் பணிபுரிந்து குறிப்பிடத்தக்கதாகும்.
|
இருபத்தியொரு வயதிலேயே மேற்கொண்டு விமானப்பயிற்சிக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்டார் அங்கு அவர் மிகப்பெரிய விமானமான போயிங் 777 ஐ ஓட்ட கற்றுக்கொண்டுள்ளார்.
|
மும்பை பல்கலைக்கழகத்தின் ரிஸ்வி சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பும் பட்டமும் முடித்துள்ளார்.. மேற்கோள்கள் பகுப்பு1987 பிறப்புகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புவான் போக்குவரத்து பகுப்புவானூர்தி ஓட்டிகள்
|
சந்திரபிரபா அர்சு 19462016 என்பவர் இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தினை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.
|
இவர் இந்தியாவின் பத்தாவது மக்களவை மற்றும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
|
அர்சு பல்வேறு காலங்களில் ஜனதா கட்சி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசுடன் பயணித்துள்ளார்.
|
ஆரம்ப கால வாழ்க்கை சந்திரபிரபா 1946ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூரில் பிறந்தார்.
|
இவரது தந்தை தேவராஜா அர்சு இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்து கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்றவர் ஆவார்.
|
இவர் திருமதி வி.
|
மத்திய மனையியல் அறிவியல் நிறுவனத்தில் நூலக அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
|
தொழில் ஜனதா கட்சியின் உறுப்பினராக சந்திரபிரபா உர்சு 1983 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அன்சூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டேவின் அமைச்சரவையில் சமூக நலம் பட்டு வளர்ப்பு மற்றும் கலால் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
|
பின்னர் இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
|
1989 முதல் 1991 வரை இரண்டாவது முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
|
1991 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு இவரை மைசூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மைசூர் மகாராஜாவுக்கு எதிராக நிறுத்தியது.
|
உர்சு 225 881 வாக்குகள் பெற்று 16882 வாக்குகள் வித்தியாசத்தில் உடையாரைத் தோற்கடித்தார்.
|
தனிப்பட்ட வாழ்க்கை சந்திரபிரபா எம்.
|
மோகன் ராஜ் அர்சை மணந்தார்.
|
உர்சு மைசூர் மருத்துவமனையில் 3 மே 2016 அன்று மாரடைப்பால் இறந்தார்.
|
மேற்கோள்கள் பகுப்பு10வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு2016 இறப்புகள் பகுப்பு1946 பிறப்புகள் பகுப்புகர்நாடக அரசியல்வாதிகள் பகுப்புகர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்
|
சகுந்தலா திம்மப்பா செட்டி .
|
பிறப்பு 1 மார்ச் 1947 என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடகாவின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
|
இவர் கர்நாடக சட்டமன்றத்தில் புத்தூர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
|
செட்டி பாரதிய ஜனதா கட்சியில் முதலில் உறுப்பினராகவும் இரண்டாவது முறையாக இந்தியத் தேசிய காங்கிரஸிலிருந்து உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
|
2018 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செட்டி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.
|
பணி செட்டி மே 2008ல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
|
திரைப்படம் சகுந்தலா செட்டி துளு திரைப்படமான காஞ்சில்ட பலே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
|
மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புதட்சிண கன்னட மாவட்ட நபர்கள் பகுப்புதுளு மக்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1947 பிறப்புகள்
|
அப்பாசியா பேகம் மெச்சி 19221970 என்பவர் 1960களில் இந்திய மாநிலமான மைசூர் தற்போது கர்நாடகா சட்டமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.
|
இவரது நாட்களில் இந்த நிலையை அடைந்த மிகச் சில முஸ்லிம் பெண்களில் இவரும் ஒருவர்.
|
இவர் 1961ல் மத்திய கல்லூரியில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.
|
தனிப்பட்ட வாழ்க்கை அப்பாசியா பேகம் மெச்சி எம்.
|
மெச்சியை மணந்தார்.
|
இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
|
வகித்தப் பதவிகள் பெங்களூரு அரசு தங்குமிடம் கண்காணிப்பாளராக ஓராண்டு பணியாற்றினார்.
|
ஏப்ரல் 1960ல் சட்ட மேலவை உறுப்பினர் மேற்கோள்கள் பகுப்பு1922 பிறப்புகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு1970 இறப்புகள்
|
நந்தினி நாயர் ஒரு இந்திய தொலைக்காட்சி ஆளுமையும் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரும் கலைஞரும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் "டிஜே என்வி" என்ற மேடைப் பெயரில் அறியப்படும் ஒரு தொழில்முறை வட்டு ஜாக்கியும் வானொலி ஜாக்கியுமாவார்.
|
இவர் தனது பேச்சு நிகழ்ச்சியான ஹலோ நமஸ்தே மூலம் நன்கு அறியப்படுகிறார்.
|
இவர் சஞ்சு சுரேந்திரன் இயக்கிய ஏடன் திரைப்படத்திலும் தோன்றினார்.
|
ஆரம்ப கால வாழ்க்கை துபாயின் ஏசியாநெட் நிறுவனத்தில் வீடியோ ஜாக்கியாக தனது தொழிலைத் தொடங்கினார்.
|
தற்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
|
ஹலோ நமஸ்தே என்ற பிரபல அரட்டை நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பு சுமார் ஒன்றரை ஆண்டுகள் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.
|
மக்கள் இவரை "டிஜே லேடி என்வி" என்று செல்லப்பெயர் சூட்டினர்.
|
சான்றுகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள்
|
நஃபிஸ் பாத்திமா நபிசு பாத்திமா பிறப்பு 6 ஏப்ரல் 1963 என்பவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகச் செப்டம்பர் 2015 முதல் சூலை 2018 வரையும் கர்நாடக மாநில காங்கிரசு செயலாளராக 2009 முதல் சூலை 2017 வரை பதவி வகித்த கருநாடகத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி.
|
இவர் இரண்டு முறை கர்நாடக புற்றுநோய் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
|
1999 முதல் 2002 வரை கர்நாடகப் பிரதேச காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார்.
|
நபிசு பாத்திமா ராய்ச்சூர் மற்றும் பெங்களூருவில் உள்ள கர்நாடகா வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை வாரிய உறுப்பினராகவும் கர்நாடகா மாநில தொழில்துறை வங்கி நிறுவன துணைத் தலைவராகவும் தூர்தர்ஷன் திட்டக் குழு உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
|
இவர் தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் அகில இந்திய வானொலி மற்றும் இந்திய குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
|
தனிப்பட்ட தகவல் நபிசு பாத்திமா பெங்களூரில் பிறந்தார்.
|
நிஜலிங்கப்பா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தனது இளம் அறிவியல் படிப்பினை முடித்தார்.
|
இக்கல்லூரியில் படிக்கும்போது மாணவர் தலைவராக இருந்தார்.
|
பின்னர் அரசியல் அறிவியலைத் தனது பாடமாகக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.
|
நபிசு பாத்திமா 9 சனவரி 1983ல் நூர் அகமது செரீப்பை மணந்தார்.
|
மேற்கோள்கள் பகுப்பு21ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1963 பிறப்புகள்
|
நீலம் கௌரானி தொழில் ரீதியாக நந்தினி ராய் என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையும் வடிவழகியுமாவார்.
|
2010 ஆம் ஆண்டின் "மிஸ் ஆந்திரப் பிரதேசம்" பட்டத்தை வென்ற பின்னர் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது.
|
சொந்த வாழ்க்கை நந்தினி சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
|
ஐதராபாத்தில் உள்ள செயின்ட் அல்பன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
|
2005 இல் பட்டம் பெற்றார்.
|
இலண்டனில் வணிக நிர்வாகத்தில் முதுநிலையை முடித்துள்ளார்.
|
80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பொருட்களின் விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.
|
தொழில் வாழ்க்கை பல அழகுப் போட்டிகளில் வென்றுள்ளார்.. குறிப்பாக மிஸ் ஐதராபாத் 2008 மிஸ் ஆந்திரப் பிரதேசம் 2010 மிஸ் பாண்டலூன்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் ஆஃப் ஏபி 2009 மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் ஆஃப் ஏபி 2010.
|
போன்றவற்றைக் கூறலாம் இவர் ஃபேமிலி பேக் என்ற இந்தி படத்திலும் தெலுங்கு படமான மாயாவிலும் நடித்துள்ளார்.
|
மற்றொரு தெலுங்கு திரைப்படமான மொசகல்லக்கு மொசகாடுவில் நடித்துள்ளார்.
|
2012 இல் பாலிவுட் படமான லாக் இன் படத்திலும் காணப்பட்டார்.
|
சஜீத்தின் குட்பை டிசம்பர் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
|
2014 இல் குஷி குஷியாகி என்ற தனது முதல் கன்னடப் படத்தில் நடித்தார்.
|
அதில் ஆடை வடிவமைப்பாளராக நடித்திருந்தார்.
|
தனது முதல் தமிழ் படமான கிரஹணம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
|
மேலும் தெலுங்கு படமான சுடிகாடு 2 க்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
|
அதில் அவர் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.
|
நடிகர் நானி தொகுத்து வழங்கிய உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.
|
சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்புகன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்புமலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புதமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்புஇந்தி திரைப்பட நடிகைகள் பகுப்புதெலுங்குத் திரைப்பட நடிகைகள்
|
நந்தினி நிம்ப்கர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேளாண்மை விஞ்ஞானியாவார்.
|
தற்போது "நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின்" தலைவராக உள்ளார்.
|
பி.வி.நிம்ப்கரின் மகளும் ஐராவதி கார்வே மற்றும் கமலா நிம்ப்கரின் பேத்தியும் ஆவார்.
|
நந்தினி ஒரு ஆராய்ச்சியாளராக நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார்.
|
பின்னர் நிறுவனத்தின் இயக்குநராகவும் பின்னர் 1990 இல் நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.
|
வேளாண் ஆராய்ச்சியில் 37 வருட அனுபவமுள்ளவர்.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.